பிந்திய செய்திகள்

பச்சை பயறு தோசை மாவு எப்படி செய்வது.

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்கு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறை கொண்டு செய்யப்படும் இந்த பச்சை பயறு தோசை மாவு ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அலாதியான சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த பச்சை பயறு தோசை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

பாசிப்பயறு தோசை செய்ய தேவையான பொருட்கள்:

பச்சை பச்சை பயறு – ஒரு கப், அரிசி -2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 3 கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 2, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன், கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவிற்கு, உப்பு – தேவையான அளவு.

பாசி பயறு தோசை செய்முறை விளக்கம்:

முதலில் பாசிப்பயறை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனுடன் அரிசி இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் அரிசி இட்லி அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசி, ரேஷன் அரிசி என்று எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. ஒருமுறை இவற்றை நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி அலசி வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீரை மூன்று கப் அளவிற்கு ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த கப்பில் பச்சை பயறை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் தண்ணீரையும் எடுத்து ஊற்ற வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். தோசைக்கு இந்த தண்ணீரை தவிர கூடுதலாக தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. குறைந்தது எட்டு மணி நேரம் இந்த பச்சை பயிறு தண்ணீரில் ஊறி இருக்க வேண்டும். எனவே முந்தைய நாள் இரவே நீங்கள் ஊற வைத்து விட்டால் மறுநாள் காலையில் மடமடவென அரைத்து சூப்பரான மொறுமொறு பச்சை பயறு தோசை சுட்டு சாப்பிடலாம்.

எனவே நீங்கள் தோசை சுடுவதற்கு முந்தைய நாளே பயறை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மறுநாள் காலையில் அந்த தண்ணீரில் இருந்து அரிசியுடன் கூடிய பச்சைப் பயறை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இஞ்சியை ஒரு இன்ச் அளவிற்கு எடுத்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். 2 பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள்.

pachai-payaru-dosai1

பொட்டுக் கடலையையும் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரம் அதிகம் தேவை என்றால் அதற்கேற்ப மிளகாய்களை கூட்டிக், குறைத்துக் கொள்ளலாம். சீரகம் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழைகளை எடுத்து நன்கு அலசி அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பச்சைப் பயறை ஊற வைத்த தண்ணீரை மட்டும் கலந்து கரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பச்சை பயிறு தோசை செய்ய தேவையான மாவு தயாராகி விட்டது.

மாவிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மெல்லியதாக தோசை வார்த்தால் மொறுமொறுவென பச்சை பயறு தோசை மணக்க மணக்க தயாராகிவிட்டது. மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக அடை போல சுட்டு எடுத்தால் பச்சை பயறு அடை தோசை தயார். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் சுட்டு மகிழலாம். இதே முறையில் நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts