பிந்திய செய்திகள்

நீர் நிலைக்குள் பாய்ந்த கார்! 25 வயதான பிரபல நடிகை தண்ணீரில் மூழ்கி பலி!

ஈஸ்வரி தேஷ்பாண்டே இந்தி மற்றும் மராத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார்.

இந்த இரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஈஸ்வரி தேஷ்பாண்டே ஓய்வுக்காக செப்டம்பர் 15ந் தேதி கோவாக்கு காரிலேயே தனது காதலர் சுப்பம் தாட்கேவுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலாவை முடிந்துவிட்டு திங்கள்கிழமை காலை பார்டெஸ் தாலுகாவில் ஹட்ஃபேட் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி அருகே இருந்த நீர் நிலைக்குள் கார் கவிழ்ந்தது.

அந்த நீர் நிலையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால் கார் விரைவாக மூழ்கியது. இதில், நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் சுபாம் தாட்கேவும் உயிரிழந்தனர்.

நீர் நிலைக்குள் பாய்ந்த கார்! 25 வயதான பிரபல நடிகை தண்ணீரில் மூழ்கி பலி -  லங்காசிறி நியூஸ்

இந்த துயர சம்பவம் 5:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது மற்றும் கார் உள்பக்கமாக பூட்டி இருந்ததால் அவர்களை விரைவாக மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கார் விபத்துக்குள்ளான போது, ஈஸ்வரி உதவி கேட்டு அழைத்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கார் அதிகவேகத்தில் சென்று கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த சாலையில் சிறிது தூரம் சென்று அதன் பிறகே நீர்நிலைக்குள் கவிழ்ந்ததாக அஞ்சுனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுராஜ் கவாஸ் கூறினார்.

மேலும், இவர்கள் இருவரும் நள்ளிரவு பார்டிக்கு சென்று இருக்கலாம் என்றும், அதற்கு அடையாளமாக அவர்களது கையில் Wristband உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

ஈஸ்வரி தேஷ்பாண்டேவும் சுபம் தாட்கேவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருந்த நிலையில் கோர விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் உயிரிழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts