பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (23-09-2021)

மேஷ ராசி

அன்பர்களே, மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய செய்தி வரும். பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பெற்றோர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். எதிர்ப்புகள் தானாக விலகும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைய இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடக ராசி

அன்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சாதூர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். வீட்டை சீரமைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். புது முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகளும், குழப்பங்களும் வரலாம். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசி

அன்பர்களே, புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களால் சங்கடங்கள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். பிரியமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்

மீன ராசி

அன்பர்களே, எதையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். இனந்தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts