பிந்திய செய்திகள்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் இரண்டு 5.8 இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 8.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஆடியோ, என்.எப்.சி. போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அசத்தல் அம்சங்களுடன் மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அறிமுகம் || Tamil News  Microsoft introduces Surface Duo 2 with Snapdragon 888

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 அம்சங்கள்

  • 5.8 இன்ச் 1344×1892 பிக்சல் அமோலெட் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
  • அட்ரினோ 660 ஜி.பி.யு.
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 11
  • ஒரு இ-சிம், ஒரு நானோ சிம்
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 12 எம்பி பிரைமரி கேமரா, ஓ.ஐ.எஸ். டூயல் எல்.இ.டி. பிளாஷ்
  • 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
  • 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஓ.ஐ.எஸ்.
  • 12 எம்பி செல்பி கேமரா
  • யு.எஸ்.பி டைப் சி ஆடியோ
  • 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ., 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
  • 4449 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 23 வாட் பாஸ்ட் சார்ஜிங்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல் கிளேசியர் மற்றும் அப்சிடியன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை 1499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,10,675 என்றும் 256 ஜிபி விலை 1599.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,18,050 என்றும் 512 ஜிபி விலை 1799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,32,810 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts