பிந்திய செய்திகள்

பிரிட்டனில் கடலில் குளிக்க சென்ற இலங்கை தமிழ் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!

பிரிட்டன் மா-கேட் கடல் கரைக்கு சில பெண்கள் குளிக்கச் சென்ற நிலையில் இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழ் பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதானவர் என்றும், மருத்துவராக பணியாற்றி வரும் அவர் அதிகாலை 3 மணி வரை நண்பிகளோடு கடலில் குளிக்க சென்றுள்ளார்.

குளித்து முடித்துவிட்டு தோழிகள் ஹோட்டலுக்கு சென்றபின்னர் தான் அவரைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில் கடல் கரைக்கு அருகாமையில் உள்ள, துறைமுகப் பகுதியில் அதிகாலை 5.45 மணிக்கு குறித்த மருத்துவர் பிணமாக மிதந்துள்ளார் .

இதேவேளை உயிரிழந்த மருத்துவர் ஒரு ஈழத் தமிழர் என்றும் அவரது தந்தையும் ஒரு மருத்துவர் என கூறப்படும் நிலையில், தாயார் சமீபத்தில் தான் புற்று நோயால் இறந்தார் என்றும் கூறப்படுகின்றது

இந்நிலையில் குறித்த மருத்துவரின் புலம்பெயர் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts