பிந்திய செய்திகள்

இன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் இப்படி வழிபட்டால் உங்கள் துன்பங்கள் யாவும் தொலையுமாம்!

சங்கடங்களை அகற்றும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு வந்தால் நம்மைப் பிடித்த பீடைகள் விலகி சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதத்தில் விநாயகரை எப்படி வழிபடலாம்? சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் நீக்குதல், நம் துன்பங்களை எல்லாம் நீக்கக் கூடிய அற்புத சக்தி வாய்ந்த இந்த சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு செவ்வாய் பகவான் தன் பதவியை அடைந்தார் என்பது புராணக் கூற்று. இப்படி சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எண்ணியதை எண்ணியபடி அடையலாம் என்பதற்கு புராண சான்றுகளை உதாரணமாக அமைந்துள்ளன. ஈசனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் ஈசனை அடைந்தார் என்பதும் உண்டு.

இப்படி தேவாதி தேவர் முதல் அத்துணை தெய்வங்கள் வரை அனுஷ்டித்த சங்கடஹர சதுர்த்தி புரட்டாசி மாதத்தில் நாமும் அனுஷ்டிக்க எல்லா விதமான நலன்களையும், வளங்களையும் பெறலாம். அதிகாலையிலேயே எழுந்து சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகரை தரிசனம் செய்து நம் பாவங்கள் நீங்க 9 முறை தோப்புக்கரணம் போடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.

விநாயகருக்கு உகந்த அரச இலைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அவருக்கு இந்த கீழ் வரும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு அர்ச்சனை செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கும். எல்லோருக்குமே வாழ்க்கையில் துன்பங்கள் இருக்க தான் செய்யும். துன்பங்கள் யாவையும் விலக இறை வழிபாடு ஒன்றே ஆதாரம். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் இவ்வாறு வழிபட நம்முடைய சங்கடங்கள் நிச்சயம் தீரும்.

விநாயகர் மந்திரம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!! கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து விநாயகர் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து நைவேத்தியம் படைக்க கொழுக்கட்டை, சுண்டல் முதலானவற்றை வைத்து அருகம்புல் சாற்றி, தீபாராதனை காண்பித்து இந்த மந்திரத்தை உச்சரித்து அரச இலைகளால் அர்ச்சிக்கலாம்.

எளிமையான முறையில் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அடையக் கூடிய பலன்கள் ஏராளம். முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது எவ்வளவு சிறப்புக்கு உரியது என்பது கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சிறு அருகம் புல்லுக்கு இருக்கும் சக்தி கூட எவ்வளவு செல்வத்தை நீங்கள் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. அருகம் புல்லால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்தும் வழிபடலாம். அருகம்புல் அர்ச்சனை செய்யும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் சுபகாரியத் தடைகள் விலகும்.

பொருளாதார ரீதியாக இருக்கும் கடன் தொல்லைகள், வருமானத் தடை போன்றவை நீங்கி செல்வம் உயரும். அதுவும் இந்த மாத சங்கடஹர சதுர்த்தியில் நீங்கள் அருகம்புல்லை வைத்து விநாயகரை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சகல, சௌபாக்கியங்களையும் பெறலாம். எனவே அருகம்புல் வைக்க தவறாதீர்கள். கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை தரிசனம் செய்து விட்டும் வரலாம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts