பிந்திய செய்திகள்

யோகாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

மனிதர்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும் சித்தர்கள் அளித்த யோகாசன கலையை பயில்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடுமையான வேலை செய்பவர்கள், கணினி சம்பந்தமான வேலை செய்பவர்கள் தினமும் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலையில் உள்ள மனஅழுத்ததால் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வடிகாலாக யோகாசன கலை இருக்கிறது.

சீரான சுவாசம் நமது உடல் நலம் சிறப்பாக இருக்க நமது சுவாசம் சீராக இருப்பதும், தூய்மையான காற்றை சுவாசிப்பதும் அவசியம் ஆகும். தினமும் யோகா சனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

இதயம் தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பலம் பெறுகிறது.மேலும் நல்ல சீரான சுவாசம் கிடைப்பதோடு இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. ஆயுளையும் நீட்டிக்கிறது.

யோகாசனங்கள் செய்யும் போது நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தை பெறுகிறது.

தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது. இரத்த ஓட்டம் யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம்.

இதனால் நம்முடைய இரத்த ஓட்டம் சீரடைகிறது. இப்படி ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் ஆகியவை சிறிது சிறிதாக நீங்குகிறது.

தினமும் யோகாசனங்கள் செய்பவர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு ஆற்றல் நம்முடைய உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே அந்த நேர்மையான மனமகிழ்ச்சியில் நமக்கு பல மடங்கு ஆரோக்கியம் உண்டாகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts