பிந்திய செய்திகள்

சுவையான பால்கோவா வீட்டுல எப்படி செய்யறது..?

நம்முடைய சிறு வயதில், அதாவது சரியாக சொல்லப்போனால் 90′ களில் பள்ளிக்கு சென்ற குழந்தை பருவத்தில், பெட்டிக் கடைகளில் இருந்து ஒரு ரூபாய்க்கு இந்த பால்கோவாவை வாங்கி நாம் சாப்பிட்டு இருப்போம்.

தற்சமயம் இப்போது பெரும்பாலும் பெட்டி கடைகள் இல்லை. இந்த பால்கோவாவும் கிடையாது. சிறுவயதில் சுவைத்த அந்த பால்கோவாவை சுவையாக நம்முடைய வீட்டிலேயே செய்து ருசிக்கலாம் வாங்க.

நீங்க சின்ன வயசுல இந்த பால்கோவை விரும்பி சாப்பிட்டு இருகீங்களா. அப்படினா கண்டிப்பா ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணுங்க.

தேவையானபொருட்கள் :

பொட்டுக்கடலை – 1 கப்,
சர்க்கரை – 1 கப்,
ஏலக்காய் – 2,
நெய் – 1/2 கப்.
பொட்டுக்கடலையை எந்த கப்பில் அளக்கிறீர்களோ, அதே கப்பிள் மற்ற பொருட்களை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்தப்பொடி அப்படியே தனியாக இருக்கட்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts