பிந்திய செய்திகள்

மெசன்ஜர் app இல் எபெக்ட்களை அறிமுகம் செய்த பேஸ்புக்!

பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது. குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. பயனர்கள் வீடியோ கால் பேசும் போது இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மெசன்ஜர் செயலியை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் இயங்கும். இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெசன்ஜர் செயலியில் அசத்தலான எபெக்ட்களை அறிமுகம் செய்த பேஸ்புக் || tamil  news Facebook Messenger Introduces New AR Group Effects for Video Calls and  Rooms

உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts