பிந்திய செய்திகள்

‘பீஸ்ட்’ படத்தில் அறிமுகமாகும் மலையாள நடிகை!

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

Newcomer actress in Vijay movie || விஜய் படத்தில் புதுமுக நடிகை

இதுதவிர மலையாள நடிகை அபர்ணா தாஸும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பீஸ்ட் படத்தில் அவர், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளாராம்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts