பிந்திய செய்திகள்

இந்த வார ராசி பலன் (25-10-2021 – 31-10-2021)

மேஷ ராசி

அன்பர்களே, உங்கள் அனுபவம் வாய்ந்த செயல்களால் வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் செல்லும். பொருளாதார வளம் கூடும். குடும்ப செல்வாக்கு வெகுவாக உயரும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும் .வாழ்க்கை தரம் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். காரியத்தடை விலகும். தூர பயணங்கள் மேற்கொள்ள நேரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி

அன்பர்களே, நீங்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப பெரியோர்களிடம் மனக்குறைகளை எடுத்து சொல்வதால் மன நிம்மதி உண்டாகும். உங்கள் அன்றாட செயல்களில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பல செலவுகள் வரும். உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வசதிகள் பெருகும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மிதுன ராசி

அன்பர்களே, எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வதுநல்லது. குடும்பத்தில் பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்ப்புகள் தானே விலகும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வர முடியும். நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். உடன்பிறந்தவர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய பணிகளை தனியாளாக நின்று செய்ய முடியும். எப்போதும் உங்களை பின் தள்ளி முந்தி செல்ல நினைப்பவர்கள் அருகில் உள்ளதை மறந்து விட வேண்டாம். குடும்பத்தை விட்டு விலகி நின்றவர்கள் மீண்டும் உங்கள் உதவியை நாடி வருவர். உடல் நலத்தில் கவனம் தேவை. பல நல்ல செயல்களால் புகழ், கௌரவம் உயரும். உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல செய்தி காதில் விழும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பெண்கள் வகையில் ஆதாயம் உண்டு. புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அதிர்ஷ்டமான விஷயங்கள் தேடி வரும், நண்பர்களிடம் ஒரு வரம்பு செல்ல வேண்டாம். உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் தாமதமாகும். குடும்பத்தில் வீண் செலவுகளை தவிர்க்கவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும் உயரும். உங்களின் பேச்சு திறன் அதிகமாகும். புது முயற்சிகளில் இருந்த தொய்வு நிலை நீங்கும். யோசிக்காமல் யாருக்கு வாக்குறுதி செய்ய முடியும். உடல் உபாதைகள் படி படியாக குறைந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல் பட முடியும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்.

கன்னி ராசி

அன்பர்களே, எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பதில் சின்ன தாமதம் இருக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் முடியும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் .அடிக்கடி பயணங்களால் நன்மை உண்டாகும். முக்கிய நேரங்களில் சிந்தித்து செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். பல நல்ல மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான சூழல் இருக்கும். பக்தி உணர்வு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.
பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி

அன்பர்களே, உங்களிடம் நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். நெருங்கிய உறவினர்கள் வகையில் தேவையில்லாத மனஸ்தாபங்கள் வரலாம். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். அண்டை, அயலாரிடம் நட்பு உறவு ஏற்படும். பயணங்கள் செல்லவேண்டிய சூழ்நிலை அமையும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணை மூலம் தன வரவு உண்டு. தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். மன அமைதியை பெற தியானம் செய்யவும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். .
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, உற்றார் உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தர முடியும். எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க வேண்டும். வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். பல எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். குடும்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும் அதை தீர்க்க கூடிய திறமை சாமர்த்தியம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உண்டு. உத்யோகத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி

அன்பர்களே, மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். உறவினர்கள் வழியில் சில விரையம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். உங்களது வசீகர பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். உங்களது நல்ல செயல்களால் சுற்று வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கையில் வேலையை கச்சிதமாக முடிக்க .முடியும். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய திட்டங்கள் சம்பந்தமாக பல புது நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பல இடையூறுகள் வரும். .
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சில மறைமுக வருமானங்களும் மறைமுக செலவுகள் இருக்கும். மனதிலிருந்த குழப்பம் மறையும். குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். வெளியில் இருந்து பல நல்ல தகவல் உங்களை வந்தடையும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் நிறையவே இருக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புது தொழில், தொடங்கும் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி

அன்பர்களே, சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட பதட்ட நிலை நீங்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். தூரத்து உறவினர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். புது வீடு மாற்றம் ஏற்படும். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். எதிலும் திருப்தி நிலை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts