பிந்திய செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2 புதிய அணிகள் சேர்ப்பு!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. அதன்படி, அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை சுமார் ரூ.7000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம், அகமதாபாத் அணியை ரூ.5200 கோடிக்கு வாங்கி உள்ளது. இத்தகவலை pcci (பிசிசிஐ ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts