பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (26-10-2021)

மேஷ ராசி

அன்பர்களே, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். எந்த காரியத்தையும் கவனத்துடன் செய்வது நல்லது. பெற்றோரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். நீண்ட நாள் தேவைகள் பூர்த்தியாகும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் இருக்கும். உத்தியோக மாற்றம் எற்படும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

கடக ராசி

நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நல்ல பலன் தரும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரியமானவர்களிடம் மனவருத்தம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்

சிம்ம ராசி

அன்பர்களே, தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

அன்பர்களே, யோசிக்காமல் யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, மனம் சந்தோஷம்படியான செய்தி ஒன்று வரும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப பெரியோர்களிடம் மனம் திறந்து பேசவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்

கும்ப ராசி

அன்பர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். எதிர் கால திட்டங்களில் ஒன்று நிறைவேறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

மீன ராசி

அன்பர்களே, மற்றவர்களிடம் நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். சுற்று வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts