பிந்திய செய்திகள்

தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து!

தலைநகர் டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ​தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.

ஆனால், தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts