பிந்திய செய்திகள்

ஹட்டன்- கல்வி வலயத்தில் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்த அதிபருக்கு எச்சரிக்கை !

இலங்கையில் நாடளாவியரீதியில் நேற்றைய தினம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மாத்திரமே கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஹட்டன்- கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரால், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பாடசாலையின் அதிபர் சாதாரணதரத்தில் கற்கும் 40 மாணவர்களையும் உயர்தரத்தில் கற்கும் 15 மாணவர்களையும் பாடசாலைக்கு அழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

அது தொடர்பில் , 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஹட்டன் பொலிஸார் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, அதிபரை எச்சரித்ததுடன் மாணவர்களையும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை குறித்து, மாணவர்களைத் தெளிவுப்படுத்துவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் , பாடசாலைக்கு வருகைத் தந்த மாணவர்களுக்கு எவ்விதமான கற்பித்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts