பிந்திய செய்திகள்

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட பிரபல நடிகை!

‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயம் ரவி,விஷால் , விஜய் சேதுபதி, சுந்தர்சி ஆகியோரின் 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா || tamil cinema raashi khanna  planted saplings on her birthday

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார்.

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts