பிந்திய செய்திகள்

குழந்தை ஒன்றிற்கு கனடாவில் Omicron..!

ஒன்ராறியோவில் குழந்தை ஒன்றிற்கு புதிய Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யார்க் பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆபிரிக்கா நாடு ஒன்றில் சென்று திரும்பிய நிலையிலேயே, குழந்தைக்கு புதிய Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யார்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவிக்கையில், 12 வயதுக்கு உட்பட்ட அந்த குழந்தையானது, குடும்ப உறுப்பினர் ஒருவருடன் தெற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றதாகவும், தற்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார்க் பிராந்தியத்தை பொறுத்தமட்டில், புதிய Omicron தொற்றானது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள குழந்தையானது தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts