பிந்திய செய்திகள்

ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி…..!

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் தம்புள்ளை ஜெயன்ட் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜெயன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பில் நுவனிந்து பெர்ணான்டோ அதிகபட்சமாக 23 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 12.3 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை (113) அடைந்தது.

இதில் அவிஷ்க பெர்ணான்டோ 33 ஓட்டங்களையும், டொம் கோலர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

சொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts