பிந்திய செய்திகள்

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் – பயன்பாட்டுக்கும் அனுமதி

சுவிட்சர்லாந்தில் “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் – பயன்பாட்டுக்கும் அனுமதி |  Newlanka

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக இயந்திரத்தை பயன்படுத்த அனுமதி!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts