பிந்திய செய்திகள்

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு 2வர் பலி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்தனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர துணை மேயர் அனஸ்டசியா ரகோலா பேசுகையில், அரசு அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஊழியர் மற்றும் பாதுகாப்பு வீரர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார். துப்பாக்கி சூட்டை நடத்தியவர் மாஸ்கோவை சேர்ந்த 45 வயது நபர் என்று தெரிய வந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts