பிந்திய செய்திகள்

உருளைக்கிழங்கு வெங்காய வடை.

உங்களுக்கு திடீரென பசி எடுக்கும் பொழுது இது போல சட்டென உருளைக்கிழங்கும், வெங்காயமும் சேர்த்து வடை சுட்டு பாருங்கள் ரொம்பவே சூப்பரான ஸ்னாக்ஸ் வகையாக இருக்கும். மாலையில் டீ குடிக்கும் பொழுது டீயுடன் சேர்த்து இந்த உருளைக்கிழங்கு, வெங்காய வடை தட்டிக் கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வடையை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய வகையில் நிச்சயம் இருக்கும். அத்தகைய சுவை மிகுந்த உருளைக்கிழங்கு வெங்காய வடை எப்படி செய்வது?

உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், கடலை மாவு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை விளக்கம்: முதலில் நீங்கள் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை கேரட் துருவும் கண்களில் தேய்த்து மெல்லியதாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உருளைக்கிழங்கை துருவும் பொழுது அதிலிருந்து தண்ணீர் விட்டிருக்கும் எனவே அந்த தண்ணீரை நன்கு பிழிந்து உலர்வாக உருளைக் கிழங்குத் துருவலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ரெண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தோல் நீக்கி நன்கு கழுவி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயத்துடன் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து உதிர்த்து விட்டால் வெங்காயம் நன்கு சாஃப்டாக வந்துவிடும். அதன் பிறகு உருளைக்கிழங்குடன், வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதே போல மல்லி இலைகளையும் நன்கு சுத்தம் செய்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

பின்னர் இந்த வடை மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், ஒன்றரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஆகிய பொருட்களை சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரே போதுமானது! இதற்காக கூடுதலாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் சுட சுட காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் இந்த உருளைக்கிழங்கு கலவையை வடைகளாகத் தட்டி போட வேண்டும். இரண்டு புறமும் நன்கு சிவந்து வர வேக விடுங்கள். அடுப்பை அதிக தீயில் வைத்தால் உள்ளே இருக்கும் மாவு வேகாது எனவே மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து சுடச்சுட பரிமாறினால் அனைவரும் உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts