பிந்திய செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகளை இராஜந்திர ரீதியில் புறக்கணிப்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் உறுதியான முடிவு

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியல் தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.

இதன்பிரகாரம் கடந்த காலங்களைப் போன்று தமது நாடு சார்பாக உத்தியோகபூர்வ அமைச்சர்களோ அதிகாரிகளோ பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பட மாட்டார்கள் என பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) அறிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை இராஜந்திர ரீதியில் புறக்கணிப்பது குறித்து பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பொறிஸ் ஜோன்சன், போட்டிகளை இராஜதந்திர ரீதியாக பிரித்தானியா புறக்கணிக்கின்ற போதிலும் போட்டிகளை புறக்கணிப்பது அறிவுபூர்வமான ஒன்று அல்ல என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் மனித உரிமை மீறல் பதிவுகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு தாம் தயங்கப் போவதில்லை எனவும் இந்த விடயத்தை சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பிலும் கலந்துரையாடியதாகவும் பொறிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts