பிந்திய செய்திகள்

மடிக்கக்கூடிய ஒப்போ பைண்ட் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பைண்ட் என் பெயரில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் ஒப்போ வெளியிட்டு உள்ளது

ஒப்போ பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் இன்னோ டே 2021 நிகழ்வில் அறிமுகமாகிறது.

நான்கு ஆண்டுகள் தீவிர ஆய்வு, 6 தலைமுறை ப்ரோடோடைப் மாடல்களை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எதிர்கால ஸ்மார்ட்போன்களுக்கு ஒப்போவின் பதில், புதிய பைண்ட் என் மாடல் இருக்கும் என ஒப்போ தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.

பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குதல் மற்றும் தற்போதைய டிரெண்ட்களில் எவ்வித சமரசமும் இல்லாத மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்க ஒப்போ நிறுவன குழு 2018 ஆண்டில் இருந்து காத்திருந்தது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts