பிந்திய செய்திகள்

கனடாவின் 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் எப்போ !

2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் (Parents and Grandparents Program – PGP 2022) எப்போது துவங்கும் என்பதைக் குறித்து கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (Immigration, Refugees and Citizenship Canada – IRCC) இதுவரை விவரங்களை வெளியிடவில்லை.

ஆனாலும், கனடாவின் 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளன.

2021-2023க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி (Immigration Levels Plan 2021-2023), கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ், 23,500 புலம்பெயர்வோரை வரவேற்க உள்ளது.

கொரோனா காலகட்டம் துவங்குவதற்கு முன்பு வரை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, ஒவ்வோராண்டும், ஜனவரி மாதம் வாக்கில், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டுவந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தின்போது, அதாவது 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், இலையுதிர்காலத்தின்போதுதான் அது குறித்த சில தகவல்களை வெளியிட்டது.

ஆக, 2022ஆம் ஆண்டுக்கான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டம் எப்போது துவக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை.

ஆனாலும், ஒரு விடயம் மட்டும் இப்போதைக்கு உறுதியாக தெரியவந்துள்ளது. அது, பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், 20 முதல் 24 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும் என்பதுதான்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts