பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-12-2021)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் சில சண்டை, சச்சரவுகள் வந்துப் போகும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் உதவியை எதிர்பார்த்து வருவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி

நேயர்களே, உங்கள் செயல்திட்டங்கள் பற்றி வெளியில் விவாதிக்க வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்கவும். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்த பிணக்குகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். எதிரிகள் விலகி நிற்பர். அநாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி ராசி

நேயர்களே, தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம் ராசி

நேயர்களே, புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். பயணங்கள் தள்ளிப்போகும். வெளிவட்டாரத்தில் புது நபர்கள் அறிமுகமாவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மகர ராசி

நேயர்களே, முக்கியஸ்தர்களின் உதவி நம்பிக்கை தரும். உடல் நலத்திலும் உணவு விஷயத்திலும் அக்கறை செலுத்தவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts