பிந்திய செய்திகள்

இலங்கை கிரிகெட் சபை விடுத்த முக்கிய அறிவிப்பு…!

தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர்இலங்கை கிரிகெட் சபைக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை கிரிகெட் சபை குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு கழகங்களுக்கான தொடர்களில் விளையாடுவதற்காக, “ஆட்சேபனை இல்லா சான்று’’ (NOCs) பெற விரும்பும் ஓய்வுபெற்ற தேசிய வீரர்களுக்கு, ஆறு மாத ஓய்வு திகதியை நிறைவு செய்திருந்தால் மாத்திரமே வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி தீர்மானங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என இலங்கை கிரிகெட் சபை அறிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts