பிந்திய செய்திகள்

2 நிமிடத்தில் உடனே சுவையான வடை செய்ய 1 கப் அவல் இருந்தால் போதுமே!

வீட்டில் இருக்கும் பொழுது ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

அந்த சமயத்தில் திடீரென அஞ்சு நிமிஷத்துல அவல் ஊற வைத்து செய்யக் கூடிய இந்த சுவையான அவல் வடை சுடுவதற்கு 2 நிமிடம் கூட ஆகாது. இன்ஸ்டன்டாக செய்யக்கூடிய இந்த டேஸ்டியான அவல் வடை நாம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம்.

2 நிமிடத்தில் உடனே சுவையான வடை செய்ய 1 கப் அவல் இருந்தால் போதுமே! டேஸ்டியான  அவல் வடை செய்வது எப்படி? | Aval vadai recipe in Tamil

தேவையான பொருட்கள்:

அவல் – ஒரு கப்

அரிசி மாவு – ரெண்டு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

பெரிய வெங்காயம் – ஒன்று

சீரகம் – அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

அவல் வடை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு வெள்ளை அவலை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை நன்கு ஒன்றிரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசி வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

அதில் ஏதாவது தூசுகள் இருந்தாலும் நீங்கிவிடும். பின்னர் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அவல் ஈரத்தை உறிஞ்சும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும், அதிகம் ஊற்ற தேவையில்லை.

4 ஐந்து நிமிடம் ஊற வைத்த பின்பு அவலுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை.

பின் அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாயை காரத்திற்காக சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு அரை டீஸ்பூன் ஜீரகம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இவற்றுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ளுங்கள்.

உருட்டினால் கைகளில் ஒட்டாமல் வர வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பதமாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல கைகளில் தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க வேக எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

ரொம்பவே சுலபமாக ரெண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அவல் வடை ஆரோக்கியமானதும் கூட. நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts