பிந்திய செய்திகள்

ராஜபக்சர்களின் ஆட்சிக்கு முடிவா பிரதமர் மகிந்தவிடம் ‘நக்கல்’ வினா

இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே“கோட்டாபய ராஜபக்சவே மீட்பாரென புகழாரம் சூட்டியவர்களே இன்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“20 வருடங்களுக்கு இந்த அரசை அசைக்க முடியாதென மார்தட்டினர். ஆனால் 2 வருடங்களிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. இப்படி நடக்குமென எமக்கு தெரியும். அதனால் தான் நாம் எதிரணி பக்கமே இருந்துகொண்டோம்.

எப்படியும் விரைவில் இந்த அரசு வீட்டுக்குச் சென்றுவிடும். உடனே வீட்டுக்கு அனுப்பவும் கூடாது. இந்த ஆட்சியாளர்களின் பலவீனத்தை மக்கள் உணரவேண்டும். அப்போது தான் இனியும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாற மாட்டார்கள்.

அரசுக்கு வாக்களித்த மக்களே இன்று அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் கூட ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகின்றது. உர நெருக்கடியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச மக்களை பார்த்து அன்று ‘செபத ?’ எனக் கேட்டார். நாமும் இப்போது சந்தோஷமா? எனக் கேட்கின்றோம்.” – என்றார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts