பிந்திய செய்திகள்

ரவை மற்றும் காய்கறிகள் பயன்படுத்தி இந்த சுவையான கார பணியாரத்தை இன்றே செய்து பாருங்கள்

மழைக்காலம், குளிர்காலம் என்றாலே மாலை நேரம் வந்ததும் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு அனைவருக்கும் ஏற்ற ஒரு வித்தியாசமான குளிருக்கு தகுந்த காரசாரமான பணியாரத்தை தான் செய்யப் போகிறோம். இதனை செய்வதற்கு அரிசி மாவு தேவைப்படுவதில்லை. வீட்டில் ரவை மட்டும் இருந்தாலே போதும். அதனுடன் ஏதாவது ஒரு காய்கறியை மட்டும் சேர்த்து இந்த பணியாரத்தை சட்டென செய்து முடிக்கலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: ரவை – ஒரு டம்ளர், தயிர் – அரை டம்ளர், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கேரட் – 2, எண்ணெய் – 100 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், சோடா உப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல் பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் தேங்காய் துருவல் பயன்படுத்தி கேரட்டை நன்றாக துருவி கொள்ள வேண்டும். அதன்பின் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்

பின்னர் கேரட் துருவலை சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு டம்ளர் ரவை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இந்த கலவையுடன் அரை கப் தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பத்து நிமிடத்திற்கு பிறகு இதனுடன் அரை ஸ்பூன் சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்ட பின்னர் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். தோசை மாவு பதத்திற்கு இல்லாமல் சற்று கெட்டியான பதத்தில் இருக்குமாறு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு குழிப்பணியாரக் கல்லை அடுப்பின் மீது வைத்து, லேசாக எண்ணெய் ஊற்றிக் கொண்டு, ஒவ்வொரு குழியிலும் இந்த மாவை ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் மறு பக்கத்திற்கு திருப்பி போட்டு, இரண்டு பக்கங்களும் நன்றாக சிவந்து வந்ததும் அவற்றை வெளியில் எடுக்க வேண்டும். இவற்றுடன் புதினா சட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts