பிந்திய செய்திகள்

சிலம்பரசனுக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டம்..!

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் சிலம்பரசன்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அறிவித்திருந்தது.

அதன்படி இன்று சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிலம்பரசன் பட்டம் வாங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு அவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

பட்டம் பெறும் சிலம்பரசன்
குடும்பத்துடன் சிலம்பரசன்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts