பிந்திய செய்திகள்

சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் கிடைக்கும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

பொங்கல் பண்டிகைக்கு இன்றும் 2 நாட்களே உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம்.

இதற்காக தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் முடிந்துவிட்டது. பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்பேரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர் என அனைத்து ரெயில்களிலும் படுக்கும் வசதி கொண்ட பெட்டியில் காத்திருப்போர் பட்டியல் 250-ஐ தாண்டி உள்ளது.

எனவே தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் கிடைக்கும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அருப்புக்கோட்டை, ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மொத்தம் 17 பெட்டிகளுடன் இயங்குகிறது.

இந்த ஐ.சி.எப். பெட்டிகளானது 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்கும் வசதி கொண்டது. எனவே இதில் 7 பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது விருதுநகர்-தென்காசி வழித்தடத்தில் உள்ள ரெயில்களில், படுக்கும் வசதி பெட்டிகளில் பொதிகை-250, கொல்லம் மெயில்-150, சிலம்பு-150 என காத்திருப்போர் பட்டியல் உள்ளதால் சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டி இணைக்க வேண்டும்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ்களில் 75 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் ரெயிலில் இன்னும் கூட்டம் அதிகரிக்கக்கூடும்.

எனவே நாளை சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts