பிந்திய செய்திகள்

வன்னி மரத்தின் மருத்துவம்

வன்னிமரம் மிக வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னிமரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னிமரம் என்று சொன்னால் அனைவருக்கும் விருதாச்சலம் தான் ஞாபகம் வரும்.விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னிமரம் இருக்கிறது.
வன்னி இலை தங்கமாக மாறும் வரலாற்றுச் சான்று

வன்னி மரத்தின் இலைகளை பறித்து தான் இந்தக் கோயிலைக் கட்டினார்கள் என்று சொல்வார்கள். எப்படி என்றால் அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து, அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால் தினசரி வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வேலையாட்களுக்கு அந்த வன்னி இலைகளை பறித்துக் கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத் தார்களோ அந்த அளவிற்கு அந்த இலைகள் பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலைகளாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படி ஒரு சக்தி இந்த வன்னி மரத்துக்கு உண்டு.

மருத்துவக்குணம்

இன்றைக்கும், பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை இக்கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது.

அதற்கு கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிப்பட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும்.

இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னி மரத்துக்கு உண்டு.

இந்த வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்த காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகளால் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயைப் பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சனை, அதிகமாக ரத்தப் போக்கு பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவக்குணம் அதில் இருக்கிறது.

இதேப் போல இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுக்கிடையே நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஐ. மற்றும் ஆர்.என்.ஐ நல்ல விதத்தில் இருக்க வேண்டும்.

நீர்த்துப் போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. இந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையும் அதிகபடும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts