பிந்திய செய்திகள்

பிரபல நடிகரின் படத்தில் பிக் போஸ் ஷிவானி…!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

நடிகை ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் இது எந்த திரைப்படமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts