பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(13-1-2022)

மேஷ ராசி

நேயர்களே, புதிய சிந்தனைகள் மனதில் உதிக்கும். உதவி கேட்டு நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவர். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.

ரிஷப ராசி

நேயர்களே, வேண்டியவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். அலைச்சல், டென்ஷன் ஆகாமல் இருக்க பழகிக்கொள்ளவும். அடுத்தவர்கள் கருத்தை விமர்சிக்க வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தின் மேல் அதிக கவனம் தேவை. பண நெருக்கடி இருக்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். சவால்கள், விவாதங்களில் ஜெயிக்க முடியும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். தடைப்பட்ட பணம் கைக்கு வரும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி

நேயர்களே, திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உடல் சோர்வு, களைப்பு நீங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொருளாதார நிலை உயரும். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, உற்றார், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மனக்கவலை நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி

நேயர்களே, நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். கையில் எடுத்த வேலைகளை கச்சிதமாக முடிக்க முடியும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts