பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது நபர்கள் வருகை தருவர். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் கவனம் தேவை

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற் முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மனதில் தெளிவு பிறக்கும். கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, சமூக நலனில் அக்கறை ஏற்படும். புது நபர்களிடம் சற்று கவனமாகவே இருக்கவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி ராசி

நேயர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம் ராசி

நேயர்களே, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியோர்கள் ஆசி கிட்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

நேயர்களே, பொருளாதார நெருக்கடி இருக்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். கணவன் மனைவி உறவு சுமுகமாக செல்லும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகர ராசி

நேயர்களே, தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி

நேயர்களே, உறவினர்களுடன் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீன ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். பயணங்களால் சில நன்மைகளும் உண்டு. எதிரி தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts