பிந்திய செய்திகள்

மல்லி – புதினா பிரியாணி செய்வது எப்படி?

தேவையானவை:
பச்சரிசி – 2 கப்,
புதினா, கொத்த மல்லி – தலா ஒரு சிறிய கட்டு,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
மல்லி – புதினா பிரியாணி செய்வது
வெறும் வாணலியில் பச்சரிசியை வறுக்கவும். புதினா, கொத்த மல்லியைச் சுத்தம் செய்து தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி…

இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, 3 கப் நீர் விட்டு அரிசி, உப்பு, அரைத்து வைத்த புதினா – கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலக்கி, குக்கரை மூடவும்.

ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அதிக செலவில்லாத இந்த பிரியாணி, அசத்தலான சுவையில் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts