பிந்திய செய்திகள்

வவுனியா பேருந்து விபத்து-13 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்

நேற்று(வியாழக்கிழமை) வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – திருகோணமலை பிரதான வீதி கெபித்திகொல்லாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 13 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பேருந்துகள், டிப்பர் வாகனத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 12 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாயொன்று குறுக்கிட்டமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்கான மேலதிக விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts