எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் இன்று சந்தித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப்பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்நிலைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் செயற்படுத்தப்பட்டுவரும் “எதிர்க்கட்சியின் மூச்சு” வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில் அது குறித்து சஜித்துக்கு , உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாராட்டை தெரிவித்தார்.