Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

நட்பே தினம் உன்னை தேடுகிறேன்!

நட்பு என்பது மிகவும் அழகானது, காதலைக் கடந்த ஆழமான உறவு…. தொடர்பே இல்லாவிட்டாலும் தொடர்ந்து நம் இதயத்தில் சிம்மாசனமிட்டு பயணிப்பது…. காதலைப்போன்றே ஒரு தேடலையும் தவிப்பையும் உணர வைப்பது… அந்த உன்னத நட்பை முதல் முதலாய் முழுதாய் உணர்ந்தது நார்த்விக் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்னுடன் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படித்த தோழி இராஜேஸ்வரி தான்… அவளைப் பற்றி எந்த தகவலும் இல்லை… என்னால் அறியவும் முடியவில்லை…. தினம் தினம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நினைவால் மட்டுமே என்னை வருடிக் கொண்டிருக்கிறாள் …..

அதற்குப் பின்பு +1 & +2 மட்டும் வடசென்னையில் உள்ள முருகதனுஷ்கோடி பள்ளியில் படித்தேன்…. படித்தேன் என்று சொல்வதைவிட ஈராண்டுகள் கடத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும் ( நான் படித்த நார்த்விக் பள்ளியைவிட்டு வர எனக்கு மனமில்லை, புது பள்ளியில் உள்ள சூழலை என்னால் ஏற்க இயலவில்லை, பலமுறை மன்றாடி மறுத்தும், எப்போதும்போல் அப்பாவின் விருப்பம் என்பதால் மாற்றத்தை ஏற்றுக் கொண்டேன்) ஆனால் அங்கு எனக்கு ஒரு அழகான நட்பு மலர்ந்தது. அவள் பெயர் கிருத்திகா ( பெயர் மாற்றம் செய்துள்ளேன்) … பள்ளிக்கு வெகு அருகாமையில் தன் தாத்தா பாட்டியுடன் அவள் வசித்து வந்ததால், என்னைப்போலவே அவளும் காலை மிகவும் முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிடுவாள்….

“என்னடா, அமுது வந்திட்டியா ?” என்ற பாசமான நலம் விழைவோடே வகுப்பறைக்குள் நுழைவாள் …. நல்ல சிவந்த நிறம், அடர்த்தியான சுருள் கூந்தல், அதை இறுக்கப் பின்னிய இரட்டை சடை, நேர்த்தியாய் கட்டிய தாவணி …. எப்போதும் எல்லோரிடமும் புன்னகை ததும்பும் சுட்டிப்பான பேச்சு , அனைவருக்கும் ஆபத்தில் உதவும் பண்பு …
அனைத்து வேலைகளையும் நேர்த்தியாக செய்யும் பாங்கு…… ஆனால் சரியான அறுந்தவால்.. கிண்டல் கேலி பேசுவதிலும் அவளுக்கு நிகர் அவளே…… வகுப்பறையில் முன்வரிசையில்

அமர்ந்திருப்பாள், நான் மூன்றாவது வரிசை…. அவ்வப்போது திரும்பி என்னுடன் பேசுவாள்…. அவளுடைய சித்திதான் , நான் நார்த்விக்கில் படிக்கும்போது என் தமிழாசிரியர்….. அதுக்கும் மேலாக அவள் பெற்றோர் சேலத்தில் இருந்தாலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவள்….. அதனால் எனக்கு அவள்மீது ஏதோ ஒரு இனம்புரியாத பாசம் பற்றிக் கொண்டது….. ஈராண்டுகள் மட்டுமே தொடர்பு, பெரியதாய் மணிக்கணக்கில் அமர்ந்து நாங்கள் பேசியதில்லை, ஆனால் நினைவில் அகலா சில நிகழ்வுகள் மட்டும் உண்டு…

அந்தப் பள்ளியில் படித்து முடித்து மான்றுச் சான்றிதழ் வாங்கியபோது, பெரியதாய் எந்தவொரு ஒட்டுதலும் மனதில் இல்லை, அவளைத் தவிர….. அப்போது எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை, அதனால் இருவரும் விலாசம் மட்டுமே பரிமாறிக் கொண்டோம்… அவள் பெற்றோர் இருக்கும் சேலத்திற்கே சென்றுவிட்டாள்… சில என் வகுப்புத் தோழிகள் என்னுடனே கல்லூரியில் சேர்ந்ததால், அவ்வப்போது அவர்கள் மூலம் அவளைப்பற்றி தகவல்கள் மட்டும் அறிந்துகொள்வேன்… இருமுறை கடிதம் எழுதினாள் , நானும் தவறாமல் அவளுக்கு பதில் எழுதினேன்…. கல்லூரி முடிந்து B.Ed சேர்ந்தேன்… அதற்கு தேர்வு எழுதி முடிவு வருவதற்கு முன்பே என் திருமணம் முடிவாகிவிட்டது…. பின்னர் குடும்பம் குழந்தை பணி என்று அடுக்கடுக்காய் கடமைகள் சேர … வாழ்க்கை விரைவான ஓட்டமும் நடையுமாகி, அந்தக் கால ஓட்டத்தில் என் தோழியை தொலைத்துவிட்டு திண்டாடினேன்…. விலாசமும் இல்லை , தொலைபேசியில் இல்லை… அவள் நினைவால் மட்டுமே என்னை தொடர்ந்து கொண்டிருந்தாள் ….

ஆண்டுகள் பல உருண்டோடி , என் காலச் சக்கரத்தில் இடறியது ஒரு அதிர்ஷ்டக்கல்… ஆம்! அந்த அதிர்ஷ்டக்கல், பல ஆண்டுகளுக்குப்பின் எனக்கும் கிருத்திகாவிற்கும் தோழியும் என்னுடன் கல்லூரியில் வேதியலில் இளங்கலை பயின்ற தோழியுமான கீத்துதான்… அன்று மதியம் வடசென்னையில் உள்ள இனிப்பகத்தில்தான் அந்த இனிய எதிர்பாராத சந்திப்பு நேர்ந்தது… பார்த்த மாத்திரத்தில் பரவசத்தில் இதயம் பறந்தது…. ( அப்போதுதான் கைப்பேசி வந்த புதிது) அவள் மிகவும் பரபரப்பாய் இருந்ததால் , ஒருசில நிமிட நலம் விசாரிப்பு, இருவர் குடும்பம் பற்றிய இலேசான தகவல் சேகரிப்பு , அத்துடன் மறவாது கைப்பேசி எண்ணையும் பரிமாறிக் கொண்டோம்….

வீட்டிற்கு சென்ற கொஞ்சம் நேரத்திற்குள் , ஆர்வக் கோளாறில் அவசர அவசரமாய் ஒரு குறுஞ் செய்தி அனுப்பினேன்…. கீத்து தொடர்பில் வந்தாள்…. மனம்விட்டு எங்கள் கல்லூரிநாட்கள் பற்றி பேசி மகிழ்ந்தோம்… அத்துடன் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது… அவள் கிருத்திகாவிடம் தொடர்பில் இருந்ததுதான்….. கீத்து என்னை அவள் இல்லம் வரும்படி அழைத்தாள்… வந்தால் கல்லூரி நாட்களில் நாங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் தருவதாய் ஆசையூட்டினாள்…. வருவதாய் வாக்களித்தேன்…. மறவாமல் கிருத்திகாவின் கைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டேன்….

ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து என் உள்ளம்…. நினைவால் வருடும் தோழியின் அன்புக் குரலை கேட்க ஆவல் மேலிட… அடுத்த நிமிடமே கைப்பேசியில் அவளை அழைத்தேன்…. கைப்பேசி அழைப்பொலி நீண்டநேரம் ஒலித்தது…. துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற ஏக்கத்தோடு கைப்பேசியை என் செவிமடலில் புதைத்துக் காத்திருக்க, மறுமுனையில் இலேசான மிக மென்மையானக் குரல்… “ஹலோ! யாரு…?”
நெல்லை மணம் மாறாத அதே அன்புக் குரல் , ஐஸ்க்ரீம் உருகி தொண்டைக்குள் வழிவதுபோல் உணர்வு…. உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பு,
“கிருத்திகா ! நான் அமுதா பேசுறேன், உன்கூட ….” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளே….. என் குரலை அடையாளம் கண்டுகொண்டாள் என் தோழி ….
“ஏய்! அமுதா எப்டி இருக்கிற?” உடன் நலம் விழைந்தாள்…. ( என் கண்கள் கசிந்ததை நிச்சயம் அவள் அறிந்திருக்க மாட்டாள்) பின்னர் தொடர்ந்தது என் நட்பின் புதிய அத்தியாயம்… நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசினோம்….

இருவரும் ஆசிரியர் பணி மற்றும் குடும்பம் என்ற கடமை ஓட்டை சுமந்த ஆமைகளாகவே இருந்தோம்…. ஆரம்பத்தில் பேசுவதில் இருந்த வேகம் குறையவே செய்தது …. நட்பிற்கு வந்த சோதனையாய், அதற்கு துணைநின்ற கைப்பேசி , என் சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்கச் சென்றக்கடையில் களவு போனது…… அதே கைப்பேசி எண்ணை என்னால் திரும்பப்பெற இயலவில்லை… என் தொடர்பு எண் மாறியது….. கிருத்திகாவின் தொடர்பும் அத்துடன் துண்டிந்துப்போனது…. கீத்துவின் கணவரின் மத்திய அரசுப்பணியில் ஏற்பட்ட இடமாற்றத்தால் அவளையும் சந்திக்க முடியாமல்போனது…..

சில ஆண்டுகளுக்குப்பின் , என் அண்ணன் டாக்டர் கலைவாணன் எனை அழைத்து, ” அமுதா , உன் பள்ளிக்கூட ஃபிரண்டு கிருத்திகாவாம், எப்டியோ என்னை கண்டுபிடிச்சு உன் நம்பர வாங்கியிருக்கா, ஒனக்கு கால் பண்ணுவானு நெனைக்கிறே” என்று சொன்னபோது… உண்மையில் நெகிழ்ந்துபோனேன்… என் தோழியும் என்னை தேடியிருக்கிறாள் என்ற நினைவே என்னை மெய்சிலிர்க்க வைத்தது… 17.8.2012 என் பிறந்தநாள் அன்று மதியம் என் தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது… அதே அன்பு பாசம் மண்வாசம் மாறாது வாழ்த்தி மகிழ்ந்தாள்…. முகநூலிலும் இருவரும் நட்பானோம்….. ஆனால் மீண்டும் தொடர்பற்றுப்போனது…. நினைவு வரும்போதெல்லாம்
முகநூல் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தேன்… முகநூலில் அஸ்திவாரம் போட்டு பெரிய பங்களா கட்டியுள்ள எனக்கு, அத்திபூத்தாற்போல வரும் என் தோழியை அனுக முடியவில்லை… சில ஆண்டுகளாய் அவள் முகநூலுக்கும் வரவேயில்லை…

யாரும் மெசஞ்சரில் என்னை அழைப்பதை விரும்பாத நான், மெசஞ்சரில் பலமுறை அவளை அழைத்தேன்…. இருநூறுக்கு குறைவான மியுச்சுவல் ஃபிரண்ட்ஸ் உள்ளவர்கள் மற்றும் புரஃபைல் லாக் செய்து வைத்திருப்பவர்களிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தால் ஏற்காத நான்… அவளைச் சுற்றிய நட்பு உறவுகளை அடையாளம் கண்டு, நானே நட்பு அழைப்பு கொடுத்தேன்…. யார் மூலமாவது அவள் தொடர்பு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்….

மூன்று நாட்களாக ஏதோ ஒரு உணர்வு, அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று…. யாரிடம் உதவி கேட்பது? மனம் மிகவும் சஞ்சலத்தில் தள்ளாட… சட்டென நினைவிற்கு வந்தவர் எனது அன்புத் தோழி Nellai Ulagammal…. விவரத்தை சொன்னேன் … நம் பாளையங்கோட்டையில் தானே ஆசிரியராக பணியாற்றுகிறார் … எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்ததோடு , பாளையங்கோட்டையில் பேராசிரியராக பணியாற்றும் இன்னொரு தோழி J P Josephine Baba அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்… கிருத்திகாவை தேடும் படலம் இன்னும் முத்முரமானது… அநேகமாக நெருங்கிவிட்டேன்… விரைவில் அவளுடன் பேசி அளவளாவுவேன் என்ற நம்பிக்கையில் நான்…..

வை.அமுதா

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss