Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

ரெட்மி : இரு ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தியது.

இந்தியாவில் இரு ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.

தற்போது இரு மாடல்கள் விலையும் இந்தியா முழுக்க உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களுக்கும் பொருந்தும்.

விலை உயர்வின் படி ரெட்மி 9 பவர் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 13,499 என்றும், ரெட்மி 9ஏ மாடல் விலை ரூ. 7,499-இல் இருந்து தற்போது ரூ. 7,799 என்றும் மாறி இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் மற்றும் ரெட்மி 9ஏ மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி 9 பவர் மாடலில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், 9ஏ மாடலில் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது.

இவற்றில் முறையே ஸ்னாப்டிராகன் 662, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெமரியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 3 ஜிபி, 32 ஜிபி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் மாடலில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், ரெட்மி 9ஏ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss