Saturday, July 24, 2021
spot_img

Latest Posts

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வளர உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தை வளரும் காலம் முதலே அவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய விஷயங்களை பெற்றோர்கள் அந்தந்த வயதில் தவறாமல் செய்ய வேண்டும். சின்ன பெண்ணாயிற்றே.. கொஞ்சம் வளர்ந்தாள் தெரிந்துகொள்வாள் என்னும் சமாதானம் இன்றைய காலத்துக்கு ஏற்புடை யது அல்ல.

பெற்றோர்கள் நொடிப்போதும் அவர்களை கண்காணிக்க முடியாது. ஆனால் உரிய விழிப்புணர்வை குழந்தைக ளுக்கு கற்றுதருவதன் மூலம் அவர்கள் துணிந்து சமூகத்தில் நடமாட முடியும். அத்தகைய துணிவையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

பெண் குழந்தைக்கு 3 வயது முதல் பதின்ம வயது வரை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடங்கள் என்று உளவியலாளர் கள் அறிவுறுத்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும். மகிழ்ச்சியாகவும் வளர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பெண் குழந்தை பிறந்ததும் அம்மாக்களுக்கு இருக்கும் கவலை எச்சரிக்கையாக வளர்க்க வேண் டும் என்பதுதான். குழந்தை பிறந்த அன்றே இந்த உணர்வு ஒவ்வொரு அம்மாக்களுக்கும் உண் டாக்கிவிடுகிறது.

கூட்டுகுடும்பத்திலும் சகோதர சகோதரிகளோடும் தாத்தா பாட்டிகளோடும் வளர்ந்த பெண் குழந் தைகளையே பொத்தி பொத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். இன்று கூட்டு குடும்பத்திலி ருந்து தனிக்குடும்பம் என்றாகி சகோதர சகோதரிகள் இல்லாமல் ஒற்றையாய் நின்று போன குழந் தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இவர்கள் வாழ்க்கையை அழகாக எதிர்கொள்ள குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த காரணமே இதுதான். அதுமட்டுமல்லாமல் இன்று நாகரிகம் என்னும் போர்வையில் அன்றாட வாழ் வில் பல மாற்றங்களை சந்திக்கிறோம். இதை எதிர்கொள்ளும் வகையில் பெண் குழந்தைகளை தயார்படுத்துவது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்று சொல்லலாம்.

​3 முதல் 8 வரையான காலகட்டங்கள்

குழந்தைகளுக்கு அன்பை மட்டுமே கொடுக்க வேண்டிய கால கட்டம் இது. பெண் குழந்தைகள் பாலி யல் ரீதியாக துன்புறுத்தப்படுவது ஒருபுறம் என்றால் அதில் இந்த வயது குழந்தைகளும் அதில் அடங் குவது துரதிஷ்டவசமானது. குடும்பத்தில் அனைவரது அன்பை மட்டுமே பெறும் குழந்தை முதன் முத லாக வெளியே செல்லும் போது வெளியில் சக மனிதர்களிடம் பழக தொடங்குகிறது. இங்குதான் பெற்றவர்களின் முதல் பயிற்சி தொடங்குகிறது.

குழந்தைகளின் ரோல் மாடல் பெற்றோர்கள் தான். அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலை யும் உங்கள் குழந்தை கவனித்துவருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.அவர்களை தனிமை படுத்தாமல் இயன்றவரை அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த வயதிலேயே குழந்தைகள் அவர்கள் வேலையை அவர்கள் செய்ய பழக்குங்கள்.

உதாரணமாக பள்ளிக்கு செல்லும் போது தண் ணீர் கேனை நிரப்பி கொள்வது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது, சத்தான உணவை மறுக்காமல் சாப்பிட பழக்குவது, உரிய நேரத்தில் தூங்க செய்வது என்று பழக்குங்கள். அவ்வபோது நண்பர்கள் உறவினர்களோடு நாளை கொண்டாடுவதும் முக்கியம். குறிப்பாக இன்றைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுதருவதும் அவசியம்..

​9 முதல் 12 வயதுவரை

இன்றைய சூழலில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தை பள்ளியில் நடக்கும் விஷயத்தை யாரிடம் பகிர்ந்துகொள்வது என்னும் குழப்பத்தில் இருப்பார்கள். தினமும் அரைமணி நேரமாவது உங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள். வகுப்பறையில் நடந்த விஷயங்களை பொறு மையாக கேளுங்கள்.

பிள்ளைகள் தவறு செய்வதையும் உங்களிடம் தெரிவிக்கும் வயது இது. இப்போது அவர்களை தண்டிக்காமல் அந்த தவறை சுட்டிகாட்டி அதனால் உண்டாகும் பிரச்சனைகளையும் பொறுமையாக எடுத்து கூறுங்கள்.இதே தவறை மீண்டும் செய்யும் போது கண்டிப்புடன் மன்னியுங்கள். இங்குதான் பல பெற்றோர்கள் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைகள் அறியாமல் தவறு செய்தாலும் அம்மா அடித்துவிடுவார்கள் என்று தவறை மறைத்து சொல்கிறார்கள்.

இந்த இடத்தில் பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் வேறுவிதமான துன்புறுத்தலுக்கு உள்ளானாலும் உங்களிடம் சொல்ல தயங்குவார்கள். அப்படியும் அவர்கள் ஒருவித பயத்தோடு உலா வந் தால் அவர்களை தற்காப்பு பயிற்சிக்கு அனுப்பி வையுங்கள்.

இந்தவயதிலேயே அவர்களின் நண் பர்கள் அவர்களது நடவடிக்கைகளையும் கவனிக்க தவறாதீர்கள். தவறான சேர்க்கையாக இருந்தாலும் கண்டிப்பு காட்டாமல் காரணம் புரியவைக்கவும் தயங்காதீர்கள். அவர்கள் வளரும் போது உரிய தோழமையை நம்பிக்கையுடன் தேர்வு செய்ய இது உதவும்.

தினமும் அரைமணி நேரம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அமர்ந்து விளையாடுங்கள், பேசுங்கள், தகவல் பரிமாறுங்கள், சமூகம் குறித்தும் பேசுங்கள். உரிய நேரத்தில் அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்ப பாலியல் விஷயங்களை மேலோட்டமாக பரிமாறவும் தயங்காதீர்கள்.

இந்த வயது முதலே அதிகப்படி நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவதையும் இண்டர்நெட்டில் உலாவ விடுவதும் கூட உங்கள் கண் முன்னாடி மட்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருங்கள்.

இந்த வயதில் உடல் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகள் அதிகப்படியான குழப்பங்களை கொண்டிருப்பார்கள். அதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அம்மாக்கள் கற்றுத்தர வேண்டும். அப்பா, அண்ணன் தவிர வேறு வெளி ஆண்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

​பதின்ம வயது 13-16

ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மிக மிக முக்கிய காலகட்டம் இது என்று சொல்லலாம். எதிர் பாலினத்தினரின் மீதான பார்வைகள் இருவருக்குள்ளும் இருக்கும். பெண்குழந்தைகள் பூப்படையும் வயது இது. உடல் தெரியும் அளவுக்கு அல்லது கண்ணை உறுத்தும் வகையில் ஆடை அணியும் காலத்தை கடந்துவிட்ட வயது இது என்பதையும் புரிய வையுங்கள்.

இந்த நேரத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கும். அதை அவர்கள் பேசும் வரை காத்திராமல் அம்மாக்களே முன் வந்து பேசினால் அவர்கள் தயக்கமின்றி உங்களிடம் உரிய சந்தேகங்களை கேட்பார்கள்.

இந்த வயதில் அம்மாக்கள் அவர்களை சுகாதா ரமான வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும். பெண் உறுப்பு சுத்தம், உள்ளாடை தேர்வு மாதவிடாய் நேரத்தை எதிர்கொள்ளும் முறை, அதற்கான உணவு முறைகள் போன்றவற்றின் அவசியத்தையும் கற்றுத்தரவேண்டும்.

இந்த வயதில் எதிர்பாலினத்தினர் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அதை புரிந்து அவர்கள் பகிர்ந்தாலும் அல்லது ஆண்நண்பர்களை பற்றியே பேசினாலும் கூட அவர்களை கண்டிக்காமல் அவர்களுக்கும் இப்படிதான் இருக்கும் என்பதையும் அதற்கு காரணம் ஹார்மோன் மாற்றங்கள் என்பதையும் எடுத்துசொல்லுங்கள்.

பெற்றோர் இருவருமே எப்போதும் உனக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கி றோம் என்னும் வார்த்தையை அடிக்கடி சொல்லுங்கள். குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். இந்த விழிப்புணர்வை அவர்களுக்கு புரிய வைத்துவிட்டால் அம்மாக்களுக்கு கவலை இல்லை.

​விழிப்புணர்வு

திருமணம் நிச்சயமான பிறகுதான் பாலியல் குறித்த சந்தேகங்களை இளம்பெண்ணுக்கு தெரிவித் தார்கள். ஆனால் சமீப காலமாக பெண் குழந்தைகள் வளரும் பருவம் முதலே பாலியல் பிரச்ச னைக்கு உள்ளாவது அதிகரித்துவருகிறது.

பாலியல் குறித்த கல்வியை அவர்களது பதின்ம பரு வத்திலேயே தொடங்கிவிடுவது நல்லது. தற்போது பள்ளிகளில் ஆசிரியையகளை கொண்டு அவ்வ போது பெண் குழந்தைகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு அளிப்பது அதிகரித்துவருகிறது.

அதே நேரம் அம்மாக்கள் இயல்பாக தோழமையாக பழகும் போது அவர்கள் காதல் வலையில் விழுந் தாலும் முதலில் பெற்றோர்களிடமே பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். பெண் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்களுடன் தோழமை காட்டினால் அவர்களும் தெளிவான மனநிலையில் அனைத்து சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்வார்கள்.

குழந்தைகளை உடலளவிலும் மனதளவிலும் மிகப்பெரிய அளவில் பலப்படுத்த உதவும் கருவி பெற்றோர்களின் அரவணைப்பு மட்டுமே.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss