பிந்திய செய்திகள்

அறிமுகமாகிறது – அன்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் ZTE ஆக்சன் 30 5ஜி

ZTE நிறுவனம் ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

தற்போது சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், இதன் சர்வதேச வெளியீட்டையும் ZTE உறுதிப்படுத்தி இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ஆக்சன் 30 5ஜி மாடலில் 6.92 இன்ச் FHD AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம்+128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி+256 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் 3CM மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங், பவர் டெலிவரி, குவிக் சார்ஜ் 4+ வழங்கப்பட்டு இருக்கிறது.

ZTE ஆக்சன் 30 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் மைஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts