பிந்திய செய்திகள்

இலங்கை- ரஷ்யாவுக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம், மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன .

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 51 பேரும் இலங்கைத் தூதுவரும் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts