பிந்திய செய்திகள்

வவுனியா பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்!!

இன்று (01) முதல் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இன்றிலிருந்து தனியான ஒரு பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை வவுனியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம் .

அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் வடக்கில் இரு பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts