பிந்திய செய்திகள்

பி.வி.சிந்து – ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை பெற்றுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் சாதனை படைத்த பி.வி. சிந்துவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பி.வி.சிந்துவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். பி.வி.சிந்து இந்தியாவின் பெருமை என பாராட்டுகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts