பிந்திய செய்திகள்

ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்கவும்- பிரான்ஸ்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்ததையடுத்து, நேற்று (திங்கட்கிழமை) ஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்கவும் பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பிரான்ஸ் ஆதரவாக செயற்படும். ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரங்கள் ஆகிவிடக்கூடாது. இதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து பிரான்ஸ் செயற்படும்.

ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாப்பாக வாழவும், ஆப்கானிஸ்தான் பெண்கள் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் வாழ உரிமை உண்டு. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராக போராடும் முதல் நாடாக பிரான்ஸ் உள்ளது’ என கூறினார்.

இதேவேளை ஜேர்மனி மற்றும் உலகின் பிற பகுதிகள் ஆப்கானிஸ்தானின் நிலைமையை தவறாக மதிப்பிட்டதாகவும், அகதிகள் நெருக்கடியை தவிர்க்க மேற்கத்திய நாடுகள் உதவி வழங்க வேண்டும் எனவும் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts