பிந்திய செய்திகள்

நீண்ட நாட்களின் பின்னர் பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் யாத்திரிகர்கள்

வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண் ணிக்கை மிகக் குறைவு என்று தேவாலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர் பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிளுக்குப் பின்னர் கடந்த ஞாயிறன்று சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்று கூடியதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண் ணிக்கை மிகக் குறைவு என்று தேவாலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

கன்னி மேரியின் விண்ணேற்பைக் குறிக்கின்ற (L’Assomption)பெரு நாளா கிய அங்கு நடைபெற்ற பிரார்த்தனைகளில் பல்லாயிரக்கணக்க கான ரோமன் கத்தோலிக்க யாத்திரிகர்கள் பங்குபற்றினர்.

பிரான்ஸின் பல பகுதிகளிலும் இருந்து வேற்று மதத்தினரும் லூர்து மாதாவைத் தரிசிக்க வந்திருந்தனர். கடந்த பல மாதகாலமாக உலகெங்கும் உள்ள லூர்து மேரி யாத்திரிகர்கள் ஆலய பூசை வழிபாடுகளை இணையம் மூலமே கண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீப நாட்களாக அடியார்கள் ஆலயத்துக்கு நேரில் வருகைதருவது அதிகரித்துள்ளது.

ஆனால்அங்குள்ள பயணிகள் தங்கும் விடுதிகள் பல இன்னமும் மூடிக்கிடக்கின்றன. கடந்த ஆண்டு சுகாதார நிலைமை காரணமாக சில மாதகாலம் மாதா வளாகம் மூடப்பட்டிருந்ததனால் பெரும் வருவாய் இழப்பை அது சந்திக்க நேர்ந்தது

இதேவேளை பிரான்ஸிலும் ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்து வசிக்கின்ற ஈழத் தமிழர் கள் பலரும் கூட ஆண்டுதோறும் லூட்ஸ் மாதாவைத் தரிசிப்பதற்காக வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts