Home Blog Page 229

டொங்கா தீவுக்கு அருகில் மீண்டும் பாரிய அதிர்வு!

0

டொங்கா தீவுக்கு அருகில் ஜீ.எம்.டி நேரப்படி இன்று காலை 6.40 மணி அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.5 கிலோ மீற்றர் பூமிக்கு அடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பசுபிக் பெருங்கடலில், அண்மையில் எரிமலை வெடித்து சிதறியதில் கடும் பாதிப்புக்கு உள்ளான டொங்கா தீவுக்கு அருகில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. டொங்காவின் பெங்கய் என்ற இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 136.1 கடல் மைல் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தை டொங்கா வாசிகள் கடுமையாக உணர்ந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி டொங்கா தீவுக்கு அருகில் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

இதனால், சுனாமி ஏற்பட்டதுடன் தீவுக்கு பெரும் அழிவும் ஏற்பட்டது. டொங்கா தீவுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நாடுகளை தாக்கும் அளவுக்கு சுனாமி ஏற்பட்டது.

இந்த சுனாமி காரணமாக டொங்கா நாட்டுக்கு இணைய வசதிகளை வழங்கும் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட இணைப்புகள் அழிவடைந்ததுடன் அது தற்போது வரை மறுசீரமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையால் டொங்கா தீவு ஏனைய உலக நாடுகளில் இருந்து தன்மைப்பட்டுள்ளதுடன் வெளி உலகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா, ஜப்பான் மீது மேற்கொண்ட அணு குண்டு தாக்குதலை விட இந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் அதினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவில் பாரம் பரிய முறையில் அரிவு வெட்டி மாட்டால் சூடடித்த படையினர்!

நேற்று 26.01.2022 ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பரிவின் 1 ஆவது படைப்பிரிவு தலைமையக முகாமில் 12 ஏக்கர் வயல் நிலயத்தில் இராணுவத்தினர் நெற் செய்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

மத அனுஸ்டானங்களுடன் அறுவடை நிகழ்வு பாராம்பரிய முறைப்பாடி நடைபெற்றுள்ளது இயந்திரங்கள் எதுவும் அறுவடை விழாவில் பயன்படுத்தப்படவில்லை.முன்னதாக நிகழ்வில் கலந்துகொள்ளும் படை அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு அறுவடை நிகழ்வு விமர்சியாக நடைபெற்றுள்ளது மாத வழிபாட்டுகளுடன் படையினர்கள் அரிவாள் கொண்டு கையால் நெல்லினை அறுவடை செய்து அதனை கொண்டுவந்து நிலத்தில் போட்டு மாட்டினை கொண்டு நெல்லினை பரித்து அதனை கையால் காற்றில் தூத்தி. எடுத்த நெல்லினை மண்பானையில் இட்டு படை அதிகாரிகளுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கியுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தபளதி மேஜர் ஜெனரால் வணசிங்க, மற்றும் படைப்பிரிவு அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,கிராமசேவையாளர் உள்ளிட்ட படை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

விராட் கோலிக்கு 2-3 மாதங்கள் ஓய்வு தேவை-முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் தெரிவிப்பு

விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுகின்றன. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதற்கு அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தரும் அழுத்தமே காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

விராட் கோலிக்கு 33 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் 5 வருடங்கள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வரலாம். அவர் வெளியே வரும் பிரச்சனைகளை மறந்துவிட்டு, அமைதியுடன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர் போட்டிகளில் இருந்து 2-3 மாதங்கள் ஓய்வு எடுத்து வந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன்.

விராட் கோலி 3-4 வருடங்களுக்கு அரசரை போன்று இருப்பார். அவரால் அணிக்கு வெற்றியை தேடி தர முடியும். அதுபோன்ற கோலியை தான் நான் காண விரும்புகிறேன்.

தோனி விட்டு சென்ற இடத்தை நிரப்புவது எளிதல்ல. கோலி விரைவாக தலைமை பொறுப்பை எடுத்துகொண்டார். டெஸ்ட் அணியையும் சிறப்பாக வழி நடத்தினார்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்

முல்லை நோக்கி ஆரம்பமான 13ஐ நிராகரிக்கும் பவனி!

இன்று(27) வவுனியாவிலிருந்து 13க்கு எதிரான விழிப்புணர்வு ஊர்தி ஆரம்பமாகியுள்ளது.இவ் ஊர்தி வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தியை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரசபையின் முன்பாகவுள்ள பொங்குதமிழ் தூபியில் காகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கற்பூரம் ஏற்றப்பட்டு ஊர்தி பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊர்தி சென்ற போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் வவுனியா நகர் வழியாக ஊர்தி முல்லைத்தீவை நோக்கி சென்றது.

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் தந்தையின் பணத்தை திருடிய பாடசாலை மாணவனின் மோசமான செயல்…!

யாழில் பிறந்தநாளுக்காக 17 வயது மாணவன் தந்தையின் பணத்தை திருடிவிட்டு பாடசாலை நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். மேலும் தெரியவருவதாவது

யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவன் ஒருவன் தனது பண அட்டையில் இருந்து யாரோ தெரியாமல் 60 ஆயிரம் ரூபாவை எடுத்துச் சென்றதாக அவரது தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையின் போது பிடிபட்டார். தந்தையின் பண அட்டை திருடப்பட்டதையடுத்து, தந்தையின் தொலைபேசியில் பணம் திருடப்பட்டது குறித்த எச்சரிக்கை செய்தியையும் மகன் தந்திரமாக நீக்கிவிட்டான்.

பின்னர் வங்கிக்கு பணம் எடுக்க தந்தை சென்றபோது, ​​வங்கியின் ஏடிஎம்மில் ஏற்கனவே 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பது ரசீதில் இருந்து தெரிந்தது. இதையடுத்து வங்கியில் பணம் எடுத்தால் போன் அலர்ட் ஆகிவிடும் என்று கருதி போனை பார்த்தார்.ஆனால் அப்படி எந்த எச்சரிக்கையும் இல்லை. இதையடுத்து, தந்தை வங்கியை தொடர்பு கொண்டு பணம் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார்.

வங்கியின் அறிவுறுத்தல்களை பொலிஸார் முறையிட்ட சில வாரங்களுக்கு பிறகு, போலீஸ் தீவிர விசாரணையில் தந்தையின் பணத்தை மகன் திருடியது தெரியவந்தது. மகனை கைது செய்த பொலிஸார், மகனின் நண்பர்களான பள்ளியில் படித்த பிரபல மாணவர்கள் சிலரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பொலிஸாரின் விசாரணையில் திருடப்பட்ட பணத்தில் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியில் கில்லாடியின் மகன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது பாடசாலை நண்பர்கள் 30 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

பொலிஸார் தனது மகனுக்கு செய்த காரியத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த தந்தை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது குறித்து பழிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் பிரபல இயக்குனர்…

0

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இவரது மகள் அதிதி கார்த்தியுடன் விருமன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அர்ஜித் தற்போது நடிகராக களமிறங்க உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது மகாராஷ்டிரா பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொலிவுட் இயக்குனரான சுனில் தர்ஷன் தயாரித்து இயக்கியுள்ள Ek Haseena Thi Ek Deewana Tha என்ற திரைப்படத்தை உரிமம் இன்றி சட்டவிரோதமாக யூடியூப்பில் வெளியிட அனுமதித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை கூகுள் நிறுவனத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விமாநிலையத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தவர் கைது!

நேற்று (புதன்கிழமை) காலைமட்டக்களப்பு விமானபடை தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் ஊழியர்களாக வேலை செய்துவரும் பணியாளர்கள் தினமும் விமான நிலையம் சென்று பணியாற்றிவிட்டு மாலையில் வீடுதிரும்பி வருவது வழக்கம்

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று காலை 8 மணியளவில் வழமைபோல விமானநிலையத்துக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுடன் பணியாளராக விமானநிலைத்திற்குள் விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக வாழைச்சேனை மீராவேரடயைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உள்நுழைந்துள்ளார்.

இவ்வாறு உள்நுழைந்தவர் அங்குள்ள விமானபடை தளப்பகுதிக்கு சென்ற நிலையில் சந்தேகம் கொண்ட விமானப்படையினர் குறித்த நபரிடம் பாஸ் கேட்டபோது அவர் தேசிய அடையாள அட்டையை காட்டியதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வாழைச்சேனை பிரதேச செயலத்தில் கடமையாற்றிவருவதாகவும் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மனைவியை கொண்டுவந்து விட்டுவிட்டு அதன் பின்னர் விமான நிலையத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளதாகவும் அதன்போது அங்கு விமான நிலையத்தினுள் வேலைக்கு உட்செல்பவர்களுடன் ஒன்றித்து விமான நிலைய சோதனைச்சாவடியை கடந்து உட்சென்றுள்ளதாக

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மற்றுமொரு துறைமுக நகரம் நிர்மாணிக்க உள்ளது

0

இலங்கையில் காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய நீர் பிரிப்பு தடாகத்துடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்தத் திட்டத்தின் மூலம் காலி துறைமுகத்திற்கு புதிதாக 40 ஹெக்டேயர் அதாவது 100 ஏக்கர் நிலப்பரப்பு கிடைக்கவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு விளக்க சிறிலங்கா துறைமுக அபிவிருத்தி அதிகார சபை நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது.

கொழும்பு துறைமுக நகரம் போன்று காலி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த ஹொட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

தேசிய முதலீட்டாளர்கள் மூலம் புதிய அபிவிருத்தியை பிரதேசத்தில் ஏற்படுத்த உள்ளதாகவும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

0

கம்பளை இல்வத்துர பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 50 முதல் 55 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றங்கரையில் பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்றும் அதிலிருந்து 15,000 ரூபா பணமும் சில மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ, குறித்த பெண் தொடர்பான தகவல்கள் அப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version