Home உலகம் இந்தியா கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை…!

கர்நாடகாவின் முன்னாள் முதலவர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை…!

0

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர் எடியூரப்பா. இவரது மூத்த மகள் பத்மாவதி. இவருக்கு சௌந்தர்யா என்ற டாக்டர் மகள் உள்ளார். இந்த நிலையில் பத்மாவதியின் மகள் மற்றும் எடியூரப்பாவின் பேத்தியான சௌந்தர்யாவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டாக்டர் நீரஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. பெங்களூரு நகரில், குடும்பத்துடன் வசித்து வந்த சௌந்தர்யா இன்று காலை 8 மணிக்கு, கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால், அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், கதவை உடைத்து பார்த்தபோது பிணமாக தொங்கிய நிலையில் சௌந்தர்யா இருந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் எடியூரப்பா குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version