வெளியான ஜியோ 5ஜி வெளியீட்டு விவரம்!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டது. சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டிற்குள் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் நிறுவனங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் என துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவும் அவ்வப்போது 5ஜி வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து வந்தது. ஹீட் மேப்ஸ், 3டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், “:நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜியோ மருத்துவம் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 5ஜி பயன்பாட்டை சோதனை செய்து வருகிறது,” என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை வெளியிடப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5ஜி சேவையை பல கட்டங்களில் வெளியிட இருக்கிறது. பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

Exit mobile version